1 Matching Annotations
  1. Jan 2022
    1. புனைவிலக்கியம் அல்லாதவை அனைத்துமே தர்க்கத்தின் மொழியில் அமைந்தவை. நாம் அவற்றை நோக்கி நம் தர்க்கத்தையே திருப்பி வைக்கிறோம். அங்கே நிகழ்வது தர்க்கபூர்வமான ஓர் உரையாடல். அந்த நூலாசிரியர் மிகச்சாதகமான நிலையில் இருக்கிறார். அவர் தன் துறையின் நிபுணராக இருப்பார். தன்னுடைய தர்க்கத்தை முன்னரும் பலமுறை முன்வைத்து, பலவகையான எதிர்வினைகளைக் கண்டு பழகி, தேர்ச்சி பெற்றவராக இருப்பார். அவருக்கு தன் தர்க்கங்களை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து சீராக முன்வைக்கும் வாய்ப்பை அந்நூல் வழங்குகிறது. பலசமயம் தேர்ந்த நூல்தொகுப்பாளர்கள் இணைந்து அந்த நூலை பழுதகற்றி அமைத்திருப்பார்கள். அந்நூலின்முன் வாசகன் கிட்டத்தட்ட நிராயுதபாணியாக நிற்கிறான். அவனும் அத்துறையில் அதேயளவு நிபுணன் அல்ல என்றால் அவன் அங்கே தோற்கும் தரப்புதான்.நீங்கள் இதை நடைமுறையில் பார்க்கலாம். சேப்பியன்ஸ் நூலை வாசிக்கும் ஒருவாசகர் மிக எளிதாக யுவால் நோவா ஹராரியின் பார்வைக்கு அடிமையாவார். அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். புனைவல்லா நூலின் வாசகர்கள் அப்படி சில நூல்களையே விதந்தோதிக்கொண்டிருப்பதைக் காணலாம். அப்படி அன்றி அந்நூலால் ஆட்கொள்ளப்படாதவர் இருந்தார் என்றால் அவர் அந்நூலுக்கு எதிரான சிந்தனைகளால் ஏற்கனவே ஆட்கொள்ளப்பட்டவராக இருப்பார். மார்க்ஸியர் சேப்பியன்ஸ் நூலை மூர்க்கமாக ஒற்றைப்படையாக மறுப்பார்கள். அது இன்னும் மோசமான அடிமைநிலை.

      Specialists are prejudicial biased in non-fiction

      • Polarised statements or arguments in the name of scientific facts
      • Externalised belief making by scientific data and information
      • Infomania