மனதிலிருந்த கதையில் இருந்த மாயக்கொப்பளிப்பு புறயதார்த்தத்துடன் ஒன்றவில்லை. ஒரு செவ்வியல் காவிய வடிவை உருவகித்தபின், செவ்வியல் அளிக்கும் வடிவச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே யதார்த்தவாதம் உட்பட எல்லாவகையான எழுத்துமுறைகளையும் கையாளும் வெண்முரசின் எழுத்துமுறையே இதற்கு உகந்தது. ஆனால் அதைக் கண்டுபிடிக்க பன்னிரண்டு ஆண்டுகள் மேலும் தேவைப்பட்டிருக்கின்றன. இது ஒரு மானசீகமான பாவனைதான். ஆனால் இதுதான் இலக்கியத்திற்கு அடிப்படையானது. ஆசிரியன் தன்னை எப்படி நினைத்துக்கொள்கிறான் என்பது. நான் என்னை ஒரு ‘காலம்கடந்த’ கதைசொல்லியாக உருவகிக்கவேண்டியிருந்தது. மாநாகத்தில் இருந்தது ஒரு அரசியல். வெண்முரசில் எல்லா அரசியல்களும் உள்ளன.
 1 Matching Annotations
        
        - Apr 2022
- 
            
www.jeyamohan.in www.jeyamohan.inTagsAnnotatorsURL
-