அவருக்கென இருப்பது அவருடைய அனுபவங்கள் மட்டுமே. அந்த அக- புற அனுபவங்களில் இருந்து அவர் நேரடியாக அடைவனவே அவருக்குரியவை. அவற்றை அளவுகோலாகக் கொண்டுதான் அவர் எல்லாவற்றையும் மதிப்பிட்டு தனக்கான முடிவுகளை அடையமுடியும். அத்தனைபேரும் இயல்பாகச் செய்வது அதைத்தான். ஆனால் எவராக இருந்தாலும் ஒருவரின் அனுபவம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டது. அதைக்கொண்டு அனைத்தையும் புரிந்துகொள்ளுமளவுக்கு ஆழ்ந்த அறிதல்களை அடையமுடியாது. அதற்குத்தான் புனைவுகளை வாசிப்பது உதவுகிறது.அவை நாம் அடைந்த அனுபவங்களை கற்பனையில் விரிவாக மீண்டும் அனுபவிக்க உதவுகின்றன. உதாரணமாக, நான் குமரிமாவட்ட வாழ்க்கையையும் தர்மபுரி மாவட்ட வாழ்க்கையையும் மட்டுமே அறிந்தவன். ஆனால் தேவிபாரதியின் நாவல்கள் வழியாக என்னால் ஈரோடு மாவட்ட வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கண்மணி குணசேகரன் வழியாக விழுப்புரம் வட்டார வாழ்க்கைக்குள் செல்லமுடியும். கீரனூர் ஜாகீர்ராஜா வழியாக இஸ்லாமிய வாழ்க்கைக்குள்ச் செல்லமுடியும். புனைவுகளினூடாக தமிழகம் முழுக்க வாழ்ந்த அனுபவத்தை நான் அடையமுடியும். அவ்வாசிப்பு எனக்கு உண்மையில் வாழ்ந்த அனுபவத்துக்கு நிகரான அறிதல்களை அளிக்கமுடியும்.
1 Matching Annotations
- Jan 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-